Pages
▼
Saturday, December 1, 2018
Friday, November 9, 2018
GOD'S PROMISE WORD (TAMIL) - 3 [உன் மூலமாக கர்த்தருடைய வல்லமை வெளிப்படும்]
“பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்…பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.” – மத்தேயு 16:19
நீ இவ்வுலகத்திலே என்னுடைய வல்லமையை கட்டவிழ்க்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறாய்; உன் மூலமாக என் வல்லமை வெளிப்படும் என்று ஆண்டவர் இன்று உனக்கு வாக்கு பண்ணுகிறார்.
“அப்பொழுது பேதுரு…என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்…” – அப்போஸ்தலர் 3:6
தன்னிடத்தில் ஏதாகிலும் கிடைக்கும் என்று நோக்கி பார்த்த ஒரு சப்பாணியின் வாழ்வில் பேதுரு தேவனுடைய வல்லமையை கட்டவிழ்த்தான். பேதுருவின் மூலமாக வெளிப்பட்ட தேவ வல்லமை அந்த சப்பாணியின் வாழ்வை மாற்றியது.
வருகின்ற நாட்களில் உன் மூலமாக என்னுடைய வல்லமை கட்டவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ என்னுடைய வல்லமைக்காக எத்தனையோ நாட்கள் என்னுடைய பாதத்திலே பொறுமையோடு காத்திருந்திருக்கின்றாய். உன் காத்திருப்பின் நாட்கள் முடிவுக்கு வருகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ உன் மூலமாய் வெளிப்படப்போகிற என்னுடைய வல்லமை அநேகருடைய வாழ்க்கையை மறுரூபப்படுத்தும் என்று கர்த்தர் இன்று திட்டமாய் உனக்கு வாக்கு பண்ணுகின்றார்.
#GHG Promise Word