Pages

Wednesday, December 25, 2019

உன்னோடுகூட இருந்து உன்னை வழிநடத்துவேன் - GHG SHORT DEVOTIONS (TAMIL)


“…கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. - மத்தேயு 2:9

சாஸ்திரிகளை வழிநடத்தும்படி தேவனால் ஏற்படுத்தப்பட்ட அவருடைய நட்சத்திரம் அவர்களை முடிவுபரியந்தம் வழிநடத்தினது. வழியிலே சாஸ்திரிகள் வழிமாறி ஏரோதினிடத்திற்கு சென்றபோதும் கர்த்தருடைய நட்சத்திரம் மாறாததாய் அவர்கள் சென்றடைய வேண்டிய ஸ்தலம் மட்டும் அவர்களை வழிநடத்தியது

மாற்கு 5:24ல் வேதம், அவர் அவனோடே கூடப்போனார் என்று சொல்லுகிறது. இயேசு யவீருடனே கூடப்போனார்.

எம்மட்டும் இயேசு யவீருடனே கூடப்போனார்

அவன் அவரிடத்தில் வேண்டிக்கொண்ட காரியத்தில் அற்புதம் செய்யுமட்டும் இயேசு அவனோடே கூடப்போனார்

வழியிலே யவீருவினுடைய வாழ்க்கையின் சூழ்நிலை மாறினபொழுதும் இயேசு மாறாதவராய் முடிவுபரியந்தம் அவனை வழிநடத்தி அவனுடைய மகளை மரணத்தினின்று எழச் செய்து அவர்கள் ஆச்சரியப்படும்படி அற்புதம் செய்தார்

வேதத்தில் சங்கீதம் 48:14ல் இவ்விதமாக வாசிக்கின்றோம்:
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

இந்த நாளிலும், உன் சூழ்நிலைகள் மாறினாலும் நான் மாறாதவராய் உன் வாழ்வில் கடந்து வந்து உன்னுடைய மரணபரியந்தம் உன்னோடுகூட இருந்து உன்னை வழிநடத்துவேன் என்று ஆண்டவர் உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்.


#GHG Short Devotions

GOD WILL GUIDE YOU - GHG SHORT DEVOTIONS


“…Behold, the star which they had seen in the East went before them, till it came and stood over where the young child was.” – Matthew 2:9

His star which was created by God to lead the wise men went before them and guided them till the end. On their way the wise men changed their ways and went to Herod, but the Lord’s star did not change and led them till they reach their destination. 

Mark 5:24 says, “…Jesus went with him…” Jesus went with Jairus.

To what extent Jesus went with Jairus?

Jesus accompanied him until He performed a miracle in the situation what Jairus was praying for. Even as the circumstances of Jairus’ life changed along the way, Jesus Christ was unchanging and led him till He made his daughter to arise from the death.

Bible says in Psalms 48:14,
“For this is God, our God forever and ever; He will be our guide even to death.”

Today you might be going through a worrisome situation. Do not worry for you have a God who is all powerful to change the situations of your life. 

“Your life situation might change but I am an unchanging God who will be with you and guide you till the end of your life,” says God to you today. 


#GHG Short Devotions