Pages

Tuesday, February 20, 2018

GHG TAMIL SHORT DEVOTIONS - 4 (தேவன் உங்கள் காரியங்களை பொறுப்பெடுத்து உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார்.)



மாற்கு 4:39  “உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.”

1.        தேவன் உங்கள் காரியங்களை பொறுப்பெடுத்து உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார்.

இயேசு கிறிஸ்து யவீருவின் வீட்டிற்குள் பிரவேசித்து அவன் வாழ்வின் சூழ்நிலைகளை அவர் பொறுப்பெடுக்கின்றார். எதற்காக? அவனுடைய வாழ்வில் அவன் இழந்து போன நன்மையை அவனுக்கு தந்து அவனையும் அவன் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியினால் நிரப்புவதற்காக.
   
ஏசாயா 35:4 “மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.”

நீ அழுகிறதென்ன? உன் வாழ்வின் சூழ்நிலைகள் உன்னை அழவைத்து கொண்டிருக்கலாம். கலங்காதே! தேவன் உன் வாழ்வின் காரியங்களை பொறுப்பெடுத்து உனக்காக யாவையும் செய்து முடிப்பார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார்.

2.   
நீங்கள் பார்க்கிற பிரகாரமாக தேவன் உங்கள் சூழ்நிலைகளை பார்ப்பதில்லை

யவீருவின் வீட்டிலிருந்த அநேகர் அவன் பிள்ளை மரித்ததினாலே அழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் யாவரின் பார்வைக்கும் அவள் மரித்தவளாக காணப்பட்டாள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பார்வைக்கோ அவள் உறங்குகிறவளாக காணப்பட்டாள்.

இன்றும் உன் வாழ்வின் சூழ்நிலைகள் உனக்கு கடினமானதாக தோன்றலாம். அதினிமித்தம் நீங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படலாம். உன் வாழ்வின் காரியம் கர்த்தரின் பார்வைக்கு இலகுவாய் அல்லவோ இருக்கிறது. அவரால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை. உன் வாழ்வின் அங்கலாய்ப்பை அவர் மாற்றி உனக்கு ஒரு அற்புதம் செய்வார் என்று ஆவியானவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.

3.               தேவனுடைய ஆறுதல் உன் ஆத்துமாவை தேற்றும்.

சங்கீதம் 94:19 “என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.”

இயேசு கிறிஸ்து மரித்த யவீருவின் மகளை உயிரடையச் செய்தார். அவ்வீட்டார் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். உன் வாழ்விலும் தேவன் பெரிய காரியங்களை செய்வார். மரித்த உன் உறுப்புகள், மரித்த சூழ்நிலைகள், மரித்த உன் ஆத்துமா, மரித்த உன் வாழ்வின் காரியங்கள் அனைத்தையும் தேவன் உயிரடையச் செய்வார்.

ஆண்டவர் உங்கள் மூலமாக மற்றும் உங்கள் வாழ்வின் மூலமாக செய்யப்போகிற மகத்துவமான செயல்கள் உன்னையும் உன்னை சுற்றியிருக்கிற மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தி, பிரிமிப்படையச் செய்யும் என்று ஆவியானவர் இன்று உங்களுக்கு வாக்குப் பண்ணுகிறார்.
 
# GHG Tamil_Short_Devotions - 4

No comments:

Post a Comment