Pages

Thursday, May 3, 2018

GHG TAMIL SHORT DEVOTIONS - 5 (நீங்கள் இனி துக்கமுகமாயிருப்பதில்லை)


1 சாமுவேல் 1:7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

அன்னாள் மலடியாயிருந்தபடியால் அவள் வேதனையின், துக்கத்தின் பாதையில் கடந்து சென்றாள். அவள் சக்களத்தி அவளை மனமடிவாக்குவாள். அநேக வருடங்களாக அன்னாள் நிந்தையின் பாதையில் கடந்து சென்றாள். ஒரு நாள் அவள் தேவ சமூகத்திற்கு சென்று தன் இருதயத்தின் பாரங்களை தேவனுடைய பாதத்தில் வைத்தாள். தேவன் அவள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார்.

இந்த நாளிலும் அன்னாள் கடந்து சென்ற அதே நிந்தை நிறைந்த துக்கத்தின் பாதையில் போய்க் கொண்டிருக்கிற உங்களைப் பார்த்து உன் வாழ்வின் சூழ்நிலைகளை தேவன் மாற்றி உன் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார் என்று ஆவியானவர் இன்று உங்களுக்கு வாக்குப் பண்ணுகின்றார்.

இன்றும் ஆண்டவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிற காரியங்கள் என்ன?
1.  தேவன் உங்கள் விண்ணப்பத்தின்படி உங்களுக்கு கட்டளையிடுவார் (1 சாமுவேல் 1:17)
2.   நீங்கள் இனி துக்கமுகமாயிருப்பதில்லை (1 சாமுவேல் 1:18)
3.   தேவன் உங்களை நினைத்தருளுவார் (1 சாமுவேல் 1:19)
4.   உங்கள் இருதயம் தேவனுக்குள் களிகூரும் (1 சாமுவேல் 2:1)
5.  உங்கள் பகைஞரின் மேல் உங்கள் வாய் திறந்திருக்கும் (1 சாமுவேல் 2:1)

உன் புலம்பல்களை நான் ஆனந்த களிப்பாக மாற்றுவேன் என்று ஆண்டவர் உங்களுக்கு வாக்குப் பண்ணுகிறார்.

# GHG Tamil_Short_Devotions-5

No comments:

Post a Comment