Pages

Friday, May 4, 2018

GHG TAMIL SHORT DEVOTIONS - 7 (ஆண்டவர் உனக்காக மறுபடியும் கலங்குகின்றார்)


யோவான் 11:38 “அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.”

உன் வாழ்வில் அற்புதம் செய்து உன்னை கல்லறையிலிருந்து உயிரோடெழுப்ப தேவனின் இருதயம் கலங்குகிறது என்று ஆவியானவர் உனக்குச் சொல்கின்றார்.

1.         ஆண்டவர் உனக்காக மறுபடியும் கலங்குகின்றார்

இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு மரித்த லாசருவை உயிரோடெழுப்பும்படி கடந்து வந்தார். மரியாளையும் அவளோடுகூட யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டு கண்ணீர் விட்டார். ஆனாலும் அவருடைய இருதயம் மறுபடியும் கலங்கிற்று.

இன்றும் நீ இழந்து போன சந்தோஷத்தை உன் வாழ்வில் திரும்ப தரும்படி தேவனின் இருதயம் உனக்காக பரிதபிக்கின்றது. உன் துக்க நாட்கள் முடிந்து போம் என்று ஆண்டவர் உனக்கு வாக்குப்பண்ணுகிறார்.

2.         தேவனின் மகத்துவமான உயிர்ப்பிக்கிற வல்லமையை நீ காண்பாய்

லாசரு மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். அவனுடைய வாழ்க்கை முடிந்து விட்டது. அவனுடைய வாழ்க்கையை குறித்ததான நம்பிக்கை அற்றுப்போயிற்று.

இன்று நீங்களும் இப்படிப்பட்ட நிலைமையில் தான் இருக்கின்றீர்கள். உங்களை சுற்றி இருக்கிற அநேகர் உங்களை குறித்ததான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். நீங்களும் எல்லாமே முடிந்து விட்டது என்று சொல்லி அதையே நம்புகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை இப்படியே முடிவடைய போவதில்லை. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிக்கிற வல்லமையை நீங்கள் காண்பீர்கள். தேவனின் மகிமை உங்கள் வாழ்வில் வெளிப்படும்.

3.         தேவன் உங்கள் வாழ்வில் செய்யப்போகிற மகத்துவமான காரியங்களை காண்பவர்கள் தேவனிடமாக திரும்புவார்கள்

யோவான் 11:45 “அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.”

லாசரு மரித்து விட்டான் என்று அறிந்து மரியாளிடத்தில் வந்து இயேசு செய்த அற்புதத்தை கண்டவர்களாகிய அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

உங்கள் வாழ்வில் தேவன் செய்த மகத்துவமான காரியங்களை நீங்கள் சாட்சியாக சொல்லும்போது அதைக் கேட்கிறவர்கள் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாவார்கள். அப்படிப்பட்ட விதத்தில் தேவனுடைய வல்லமை உங்கள் வாழ்வில் வரும் நாட்களில் வெளிப்படும் என்று ஆவியானவர் உங்களுக்கு சொல்கின்றார்.

நீங்கள் எழும்பி நிற்பீர்கள். உங்கள் வாழ்வில் ஓர் புதிய ஆரம்பம் உண்டாகும்.
இன்று ஆண்டவர், இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். (ஏசாயா 43:19) என்று உங்களுக்கு  வாக்குப்பண்ணுகிறார்.

#GHG Tamil Short Devotions - 7

No comments:

Post a Comment