Pages

Friday, September 7, 2018

GHG PROMISE WORD (TAMIL) - 2 [நீ போகின்ற வழியை தேவன் அறிவார்]


இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.” யோபு 23:8

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்யோபு 23:10

தேவனுடைய பிரசன்னத்தை உணரக்கூடாத ஓர் சூழ்நிலையில் நீ கடந்து சென்று கொண்டிருந்தாலும் நீ போகின்ற வழியை தேவன் அறிவார் என்று ஆவியானவர் இன்று உனக்கு சொல்கின்றார்.

நாயீன் ஊர் விதவை தன் மகனை இழந்து வேதனையோடு கடந்து வந்த போது தேவன் அவள் துக்கத்தை அறிந்து அவள் மேல் மனதுருகி அவள் வாழ்வில் அற்பதம் செய்தார்.

அதே மாறாத கர்த்தர் இன்று உன்னைப் பார்த்து, என் பிள்ளையே, நான் உன் வலியை, உன் வேதனையை, துக்கத்தை அறிந்திருக்கிறேன் என்று சொல்கின்றார்.

ஒரு வேளை நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணராதிருக்கலாம். ஆனால் அவர் உங்களோடுதான் இருக்கின்றார்.

உங்கள் வழியை அறிந்திருக்கிற தேவன் உங்களுக்கு எதை இன்று வாக்குப்பண்ணுகிறார்?

எனக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்…யோபு 23:14

உங்களுக்கென்று குறித்திருக்கிற ஆசீர்வாதத்தை தேவன் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுக்கு வாக்குப்பண்ணின நன்மைகளை தேவன் உங்களுக்கு அருளிச் செய்வார்.

சாம்பலில் உட்கார்ந்திருந்த யோபுவின் வாழ்க்கையை தேவன் கட்டியெழுப்பினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். இன்று ஒன்றுமில்லாதிருக்கிற உன் வாழ்க்கையை நான் கட்டி எழுப்புவேன் என்று ஆண்டவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகின்றார்.

நீங்களும் நன்மையை பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும் என்று ஆவியானவர் வாக்குப்பண்ணுகிறார்.

#GHG Promise Word

No comments:

Post a Comment