Pages

Thursday, October 24, 2019

ஈசாக்கின் பயபக்திக்குரியவர் - GHG SHORT DEVOTIONALS (TAMIL)


என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால்…”ஆதியாகமம் 31:42

“…அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.” - ஆதியாகமம் 31:53

யாக்கோபு தன்னுடைய தேவனைக் குறித்து குறிப்பிடும்பொழுது அவரை ஈசாக்கின் பயபக்திக்குரியவர்  என்கிறதான ஒரு புது நாமத்தினால் குறிப்பிடுகின்றான்.

ஈசாக்கின் பயபக்திக்குரியவர் என்று தேவனை யாக்கோபு ஆணித்தரமாக குறிப்பிடுவதின் மூலமாக ஈசாக்கினுடைய வாழ்க்கை நிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.தேவன் மீது ஈசாக்கு கொண்டிருந்த மிகுந்த பயபக்தி அவனுடைய குமாரனாகிய யாக்கோபின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை உண்டாக்கினது.

இன்று தேவனைக் குறித்து அவர் என்னுடைய பயபக்திக்குரியவர் என்று தைரியமாக நாம் கூறமுடியுமா? அல்லது நம்முடைய குடும்பத்தார் யாக்கோபு அவன் தகப்பனைக் குறித்து சாட்சி கொடுத்ததுபோல நம்மைக் குறித்து சாட்சி கொடுக்க முடியுமா?

நாம் தேவன் மீது பயபக்திகொண்டவர்களாக வாழ்கிறோமோ என்பதை இந்த நாளிலே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று ஆவியானவர் விரும்புகின்றார்.

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, - எபிரேயர் 5:7

இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்த வாழ்க்கை தேவன்பேரில் உண்டான பயபக்தியினால் நிறைந்திருந்தது என்பதாக வேதத்தில் வாசிக்கின்றோம். அப்படியென்றால் நீங்களும் நானும் எப்பேர்ப்பட்ட பயபக்தி நிறைந்தவர்களாக வாழ வேண்டும்!

#GHG Short Devotions

No comments:

Post a Comment