Pages

Friday, June 5, 2020

GHG PROMISE WORD (TAMIL) - 5 | ஒன்றும் உங்களை சேதப்படுத்துவதில்லை


“… சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. லூக்கா 10:19

எதிர்நிற்கின்ற போராட்டங்களினால் பயத்தோடும் கலக்கத்தோடும் நிற்கின்ற உங்களைப் பார்த்து, ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது என்று ஆவியானவர் சொல்கின்றார்

யோசேப்பினுடைய வாழ்க்கையை குறித்து வேதம் ஆதியாகமம் 49:23-24ல் இவ்விதமாக சொல்கின்றது:
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன…”

தேவன் அவனுக்கு துணையாக நின்றதினால் ஒன்றும் யோசேப்பை சேதப்படுத்தவில்லை. இந்த நாளில் தேவன் உங்களுக்கும் துணையாக எழும்பியிருப்பதினால் எந்த சத்துருவின் வல்லமையோ, மந்திரவாத கிரியைகளோ, மனிதரின் தவறான திட்டங்களோ உங்களை சேதப்படுத்துவதில்லை என்று ஆவியானவர் சொல்கின்றார்.
தேவன் உங்களுக்கு துணையாக இருப்பதினால்
 
1.    உங்களை மரண பயத்துக்குள்ளாக நடத்துகின்ற சூழ்நிலைகள் உங்களை சேதப்படுத்துவதில்லை. (மத்தேயு 8:23-27)

கடலில் பெருங்காற்று உண்டாகி படவு அலைகளினால் மூடப்படத்தக்கதான சூழ்நிலைகள் எழும்பினபோது சீஷர்கள் மரண பயத்தினால் நிரப்பப்பட்டார்கள். ஆனாலும் இயேசு எழும்பி காற்றையும் கடலையும் அதட்டி அந்த சூழ்நிலைகள் தம்முடைய சீஷர்களை சேதப்படுத்தாதபடி வழிநடத்தினார்.

கடன் பிரச்சனை, வியாதி, தோல்விகள், தேவைகள் நிறைந்த சூழ்நிலைகளினால் மரண பயத்தினால் நிரம்பியிருக்கின்ற உன் வாழ்வின் நிலைகளில் மிகுந்த அமைதல் உண்டாகும்; உன் சூழ்நிலைகள் ஒன்றும் உன்னை சேதப்படுத்துவதில்லை என்று ஆவியானவர் சொல்கின்றார்.

2.    உங்கள் ஜீவனுக்கு எதிராக எழும்பியிருக்கின்ற, எழுப்பப்பட்டிருக்கின்ற சத்துருவின் கிரியைகள் உங்களை சேதப்படுத்துவதில்லை. (மாற்கு 9:17-27)

ஒரு தகப்பன் ஊமையான ஆவி பிடித்த தன்னுடைய மகனை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து இவ்விதமாக சொல்கின்றான்: இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.

அந்த மகனை கொல்லும்படிக்கு எழும்பியிருந்த சத்துருவின் பிடியிலிருந்து எந்த சேதமுமின்றி இயேசு அவனை விடுவித்தார். அவன் வாழ்ந்திருக்கும்படி செய்தார்.

உன்னுடைய ஜீவனுக்கு விரோதமாக எழும்பியிருக்கின்ற சத்துருவின் கிரியைகளோ, உன்னுடைய ஜீவனுக்கு விரோதமாக எழுப்பப்பட்டிருக்கின்ற மந்திரவாத வல்லமைகளோ உன்னை சேதப்படுத்துவதில்லை என்று ஆவியானவர் சொல்கின்றார்

தேவன் உங்களுக்கு துணையாயிருப்பதினால் ஒன்றும் உங்களை சேதப்படுத்துவதில்லை. நீங்கள் சுகமாய் வாழ்ந்திருப்பீர்கள்.

No comments:

Post a Comment