Pages

Tuesday, June 16, 2020

உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகும் - GHG SHORT DEVOTIONS (TAMIL)


“…இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?... மத்தேயு 9:28

இரண்டு குருடர்கள் தங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை பெற்றுக்கொள்ளும்படி இயேசுவினிடத்தில் வந்தார்கள். முதலாவது அவர்கள் இயேசுவை நோக்கி தங்களின் விண்ணப்பத்தை எறெடுத்தார்கள். இயேசு அவர்களுடைய விண்ணப்பத்திற்கு செவிசாய்தார். ஆனாலும் உடனே அற்புதம் செய்யாமல் அவர்களிடத்திலே, “…இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டார்

மிகுந்த போராட்டங்களினூடே கடந்து செல்கின்ற நீயும் ஒரு அற்புதத்தை பெற்றுக்கொள்ளும்படி இயேசுவை நோக்கி ஜெபித்துக் கொண்டிருக்கலாம். இன்று உன்னைப் பார்த்து ஒரு எதிர்பார்போடு இயேசு, நீ எதிர்பார்த்து காத்திருக்கின்ற அற்புதத்தை செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கின்றாயா என்று கேட்கின்றார்.

இதை வாசிக்கின்ற நீ உன் அவிசுவாசத்தினால் தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்துகின்றாயா? அல்லது அவரை முழுவதுமாக விசுவாசிக்கின்றாயா

நீ விசுவாசிப்பாயானால் உன் இருதயம் பயத்தினால் நிறைந்து உறுதித்தன்மையற்று காணப்படுகிறதென்ன என்று ஆவியானவர் கேட்கின்றார்.

இந்த நாளிலே உன் வாழ்விலே அற்புதம் செய்யும்படி உன்னிலே இயேசு விசுவாசத்தை எதிர்பார்கின்றார். உன் அவிசுவாசம் நீங்கும்படி நீ தேவனிடத்தில் கேட்பாயானால் அவர் நிச்சயமாக உனக்கு உதவி செய்வார்.
அந்த குருடரின் விசுவாசம் இயேசு அவர்களின் வாழ்வில் அற்புதம் செய்கிறதற்கு ஏதுவாயிருந்ததினால் உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்று இயேசு சொன்னபொழுது உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது.

இந்த நாளிலும் நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால் உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகும் என்று ஆவியானவர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகின்றார்.

நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் காரியத்தை செய்ய தேவனுக்கு வல்லமை உண்டென்று பூரணமாக விசுவாசியுங்கள். அப்பொழுது தேவனுடைய மகிமை நிச்சயமாக உங்கள் வாழ்வில் நிறைவாக வெளிப்படும். தேவனை நம்புகின்ற நீங்கள் ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை.

“மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.” – மத்தேயு 21:22

#GHG SHORT DEVOTIONS

No comments:

Post a Comment