Pages

Sunday, September 26, 2021

GHG TAMIL SHORT DEVOTIONS - 13 (உன்னை எல்லா பயங்கரத்தினின்றும் இரட்சிக்கும்படி தேவன் நிச்சயமாக வருவார்)

“…எசேக்கியா மிகவும் அழுதான். ஏசாயா 38:3

இந்த நாளிலும் நீங்கள் எதிர்கொள்கின்ற சூழ்நிலைகளினிமித்தம் கண்ணீரின் பாதையில் கலக்கத்தோடு நீங்கள் கடந்து போய்க்கொண்டிருக்கலாம்.

எசேக்கியா ராஜா கடினமான ஒர் சூழ்நிலைக்குள் கடந்து போனான். அவன் வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான். அவன் பிழைப்பதில்லை என்று கர்த்தருடைய வார்த்தை வெளிப்பட்டபொழுது மனம் கலங்கினவனாக மிகவும் அழுதான்.

எசேக்கியா மிகவும் அழுதபோது என்ன நடந்தது?

ஏசாயா 38:20ல் எசேக்கியாவினுடைய அனுபவம் எழுதப்பட்டிருக்கின்றது.

கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்…”

எசேக்கியாவின் கண்ணீர் தேவனுடைய மனதை அசைத்தது. ஆகையால் அவனை மரண இருளிலிருந்து இரட்சிக்கும்படி தேவன் கடந்து வந்தார்.

இந்த நாளிலும் பயங்கரங்கள் உன் வாழ்க்கையை சூழ்ந்திருப்பதினால் மிகவும் கண்ணீரோடு காணப்படுகின்றாய் அல்லவா? நம்பிக்கையற்ற சூழ்நிலையினூடே கண்ணீரோடு கடந்துபோய் கொண்டிருக்கின்ற உன்னை எல்லா பயங்கரத்தினின்றும் இரட்சிக்கும்படி தேவன் நிச்சயமாக வருவார் என்று ஆவியானவர் உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்.

எசேக்கியா செய்த காரியம் என்ன?

தேவனுடைய வார்த்தை ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக வெளிப்பட்டபொழுது அவன் ஏசாயாவை நோக்கியும் வேறெந்த மனிதனை நோக்கியும் அழாமல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி அழுதான்.

மனிதர்கள் மீது உன் நம்பிக்கையை வைக்காதபடி தேவன்பேரில் நம்பிக்கைவைத்து அவரை நோக்கி நீ பார்ப்பாய் என்றால் நிச்சயமாகவே இரட்சிக்கப்படுவாய் என்று பரிசுத்த ஆவியானவர் இன்று உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்.


#GHG Devotions

 


No comments:

Post a Comment