Pages

Wednesday, February 14, 2018

GHG TAMIL SHORT DEVOTIONS - 1 (உன் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இல்லாமற் போவார்கள். )



“… உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள்…” - யாத்திராகமம் 4:19

“…. பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இறந்து போனார்கள்…” - மத்தேயு 2:20

உன் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இல்லாமற் போவார்கள். நீயோ வாழ்ந்து சுகமாயிருப்பாய் என்று ஆண்டவர் இன்று உங்களுக்கு வாக்குப் பண்ணுகிறார்.

1. உங்கள் எதிராளியினிடத்தில் தேவன் உங்களை ஒப்புக்கொடுப்பதில்லை

“…. சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை” - 1 சாமுவேல் 23:14

தாவீதின் ஜீவனுக்கு விரோதமாக சவுல் எழும்பி, அவனைக் கொல்ல சவுல் அனுதினமும் தேடியும், தேவன் தாவீதை சவுல் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.முடிவிலே சவுல் மரித்தான். தாவீது ராஜாவாக அரசாள தேவன் அவனுக்கு கிருபை பாராட்டினார்

2. உன்னோடு போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்

உன்னோடு போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடு யுத்தம் பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்” - ஏசாயா 41:12

தாவீதும் அவனோடு கூட இருந்தவர்களும் நாபால் என்னப்பட்ட ஒருவனுடைய மேய்ப்பர்களுக்கு ஆதரவாயிருந்து நாபாலின் பொருட்கள் ஒன்றும் காணாமல் போகாதபடிக்கு அவர்களை சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.ஆனாலும் நாபால், தாவீது அவனுக்கு செய்த நன்மைக்குத்தக்கதாய் அவனை நடத்தாமல் அவனுக்கு தீமை செய்தான். அதினால் தாவீது நாபாலுக்கு விரோதமாய் எழும்பி சென்றபோது நாபாலின் மனைவி அவனுக்கு எதிர்ப்பட்டு ஓர் அருமையான காரியத்தை சொல்கிறாள்:

"உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்." - 1 சாமுவேல் 25:29

நாபாலின் மனைவியின் சொல் கேட்டு தாவீது பழி வாங்காமல் திரும்பி சென்றான். முடிவிலே கர்த்தர் நாபாலை வாதித்ததினால் அவன் செத்தான். தாவீதின் நிந்தையின் வழக்கை தேவன் நாபாலின் கையில் விசாரித்தார்.

எனக்கு அருமையான தேவனுடைய பிள்ளைகளே, பழிவாங்குதல் கர்த்தருக்குரியது. உங்களை துன்பப்படுத்தவும் உங்கள் பிராணனை வாங்க வகைத்தேடியும் மனுஷர்கள் எழும்பலாம். கலங்காதீர்கள்

அவர்களிடத்தில் தேவன் உங்களை ஒப்புக்கொடுப்பதில்லை. உங்கள் ஆத்துமா கர்த்தரின் ஆதரவில் இருக்கும். உங்கள் சத்துருக்களின் ஆத்துமா எறியப்பட்டுப்போம். அவர்கள் மாண்டுபோவார்கள். நீங்கள் அவர்களை தேடியும் காணாதிருப்பீர்கள். நீங்கள் சுகமாய் தங்கி வாழ்ந்திருப்பீர்கள். தேவன் உங்களுக்கு துணை செய்வார்.

# GHG Tamil Short Devotions

No comments:

Post a Comment