Pages

Wednesday, February 14, 2018

GHG TAMIL SHORT DEVOTIONS - 2 (உங்களுக்கு நன்மை செய்யும்படி இயேசு உங்களோடுகூட வருவார்)



அவர் அவனோடே கூடப் போனார்…” - மாற்கு 5:24

இயேசு யவீருடனே கூடப் போனார். எவ்வளவு அருமையான ஓர் பாக்கியம் பாருங்கள்.

1. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எதினால் ஒர் சாதாரண மனிதனாகிய யவீருடனே கூடப் போனார்?

யவீரு இயேசுவின் பாதத்தில் விழுந்து மிகவும் வேண்டிக்கொண்டான். (மாற்கு 5:22, 23)

தன் மகளை சொஸ்தமாக்க இயேசு தம்மோடு கூட வரும்படி யவீரு அவரின் பாதத்தில் விழுந்து வேண்டிக்கொண்டான். அவன் விண்ணப்பத்தைக் கேட்டு அவனோடு கூட இயேசு போனார்.

ஆண்டவரே என்னுடைய வாழ்வின் சூழ்நிலைக்குள் கடந்து வந்து எனக்கு ஓர் அற்புதம் செய்து என்னை ஆசீர்வதியும் என்று ஆண்டவரிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிற உங்களோடுகூட இயேசு வருவார் என்று ஆவியானவர் இன்று உங்களுக்கு சொல்கிறார்.
2. இயேசு எதற்காக யவீருடனே கூடப் போனார்?

மரண அவஸ்தைப்படுகிற அவனுடைய ஒரே குமாரத்தியின் மீது கைகளை வைத்து அவளை பிழைப்பூட்டும்படி இயேசு யவீருடனே கூடப் போனார் (மாற்கு 5: 23,24)

உங்கள் வாழ்விலும் தம்முடைய கரத்தினால் உங்களுக்கு நன்மை செய்யும்படி இயேசு உங்களோடுகூட வருவார்.

யவீரு தேவனிடத்திலிருந்து நன்மையை பெற்றுக் கொள்ள என்ன காரணம்?

1. அவன் விசுவாசித்தான்(மாற்கு 5:23)
2.
அவன் தன் விசுவாசத்தில் நிலைத்திருந்தான் (மாற்கு 5:36)

இயேசு வந்து மரண அவஸ்தைப்படுகிற தன் மகளின் மீது கைகளை வைப்பாரென்றால் அவள் பிழைப்பாள் என்று யவீரு விசுவாசித்தான்.

பிற்பாடு அவன் வீட்டிலிருந்து சிலர் வந்து அவள் குமாரத்தி மரித்துப் போனாள் என்று சொன்னபோது கூட அவன் இயேசு கிறிஸ்துவை விடாமல் பற்றிக் கொண்டான். அற்புதத்தைப் பெற்றுக்கொண்டான்.
உங்கள் வாழ்வின் சூழ்நிலை உங்கள் விருப்பத்திற்கு மற்றும் உங்கள் விண்ணப்பத்திற்கு மாறாக கடினமாகி கொண்டு இருக்கலாம்

பயப்படாமல் விசுவாசமுள்ளவர்களாய் இயேசு கிறிஸ்துவை தொடர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஆண்டவர் உங்கள் வாழ்வில் அற்புதம் செய்வார்.



#GHG Tamil Short Devotions

No comments:

Post a Comment