“விசுவாசித்தவளே பாக்கியவதி,
கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும்…” லூக்கா 1:45
கர்த்தரால் சொல்லப்பட்டவைகள்
உங்கள் வாழ்வில் நிச்சயம் நிறைவேறும் என்று ஆவியானவர் இன்று உங்களுக்கு சொல்கின்றார்.
1. தேவனுடைய வாக்குதத்தம் உங்கள் புத்திக்கு எட்டாததாய், உங்கள் எதிர்பார்ப்பிற்கு
மேலாக, உங்களால் விளங்கிக் கொள்ள முடியாததாய் இருக்கலாம். ஆனாலும் அது நிறைவேறும் என்று
ஆவியானவர் சொல்கின்றார்.
“உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும்,
உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து,
அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.” ஏசாயா 51:2
தேவன் ஆபிரகாமை அவன் ஒருவனாயிருக்கையில்
அழைத்தார். சாராள் மலடியாயிருந்தபோது தேவன் ஆபிரகாமிடத்தில் அவன் சந்ததி பூமியின் தூளைப்
போலிருக்கும் என்றார்.
ஒரு நாள் தேவன் அவனை அழைத்து
“… நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு
என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.” ஆதியாகமம்
15:5.
ஆபிரகாமுக்கு குழந்தை இல்லாதபோது
தேவன் அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆசீர்வாதங்களை அவனுக்கு வாக்குப்பண்ணினார்.
ஆபிரகாம் விசுவாசித்தான். தேவன் அவர் வாக்குப்பண்ணின யாவையும் அவன் வாழ்வில் நிறைவேற்றினார்.
இன்று ஆண்டவர் அதைத்தான் உங்களுக்கும் வாக்குப்பண்ணுகிறார். தேவன் தம் வாக்குதத்தங்களை
உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவார். இதுவரை நீங்கள் கண்டவைகளைவிட பெரிதானவைகளை இனி நீங்கள்
காண்பீர்கள்.
#GHG Promise Word (Tamil)