“…இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்.” யோசுவா 10:42
யோசுவாவுக்கு விரோதமாக நின்ற எல்லா ராஜாக்களையும், அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான். எப்படியென்றால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்.
உனக்கு விரோதமாக எழும்பி நிற்கின்ற மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளை, உனக்கெதிராக இருக்கின்ற சத்துருவை, நீ ஒருமிக்க மேற்கொள்ளுவாய் ஏனென்றால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்காக யுத்தம் பண்ணுவார் என்று ஆவியானவர் இன்று உனக்குச் சொல்கின்றார்.
எனக்கு பெலனில்லை; என்னால் இந்த காரியங்களை மேற்கொள்ள முடியாது; எனக்கு விரோதமாக இருக்கின்ற இவர்களுக்கு முன்பதாக என்னால் நிலை நிற்க முடியுமா; அவர்களுடைய தகுதியும் பெலனும் என்னுடைய சத்துவத்தைவிட பெரிதல்லவோ என்பதாக எண்ணுகின்ற உன்னைப் பார்த்துதான், நான் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பேன் என்று ஆண்டவர் இன்று சொல்லுகின்றார்.
உங்கள் சத்துருக்களை நீங்கள் எளிதாக முறியடிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
கர்த்தரை உங்கள் தேவனாக வைத்து அவருக்கு முழுவதுமாக கீழ்ப்படிந்து அவரைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். உங்களுக்காக வைராக்கியங் கொண்டு யாவற்றையும் செய்து முடிப்பார்.
“அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ…உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவோ என்றார்” நியாயாதிபதிகள் 6:14

#GHG Promise Word