1 சாமுவேல் 16: 7 “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”
1. தேவன் புறக்கணித்த நபரை நீங்கள் தெரிந்தெடுக்காதிருங்கள்.
சாமுவேல் எலியாபைப் பார்த்தவுடனே அவன் வெளித்தோற்றத்தைக் கண்டு கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்று நினைத்தான்
திருமணமாகாதவர்களாய் இருக்கிற நீங்கள் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டு அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட
ஒருவரையே நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையாக தெரிந்தெடுக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார்.
அவர் புறக்கணித்த நபரை நீங்கள் தெரிந்தெடுக்காதிருங்கள். தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அவருக்கு பிரியமான நபரை நீங்கள் தெரிந்தெடுத்து திருமணம் செய்து கொள்வீர்களென்றால்
உங்கள் எதிர்காலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
2. யாருடைய வெளித்தோற்றத்தையும்
கண்டு ஏமாறாதீர்கள்.
வேதாகமம் நீதிமொழிகள்
31:30ல் இவ்வாறாக கூறுகின்றது “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்...” உங்கள் பார்வைக்கு அழகாக தெரியும் நபர்களுக்கு பின்னாக செல்லாதிருங்கள்.
ஒருவரின் வெளித்தோற்றத்தைக்
கண்டு ஏமாறாதீர்கள். தேவன் இருதயத்தை பார்க்கின்றார். உங்கள் எதிர்காலத்திற்க்கு ஆசீர்வாதமான நபர் யார் என்பது தேவனுக்கு தெரியும்.
நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கு பின்னாக ஓட அழைக்கப்பட்டவர்கள்
அல்ல. நீங்கள் தேவனுக்காக பெரிய காரியங்கள் செய்ய அழைக்கப்பட்டவர்கள். எனவே தவறான உறவை தெரிந்தெடுத்து உங்கள் வாழ்வை வீணாக்காதீர்கள்.
இன்று நீங்கள் ஓர் இச்சை நிறைந்த பாவமான உறவுக்குள் சிக்குண்டிருக்கலாம். அந்த உறவை விட்டு நீங்கள் உடனே வெளியேற வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். தேவனுடைய இருதயம் உங்களுக்காக ஏங்கி கண்ணீர் சிந்துகிறது என்று ஆவியானவர் உங்களுக்கு சொல்கின்றார்.
“பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” கலாத்தியர் 5:16
# GHG Tamil Short
Devotions
No comments:
Post a Comment