லூக்கா 1:43 “என் ஆண்டவருடைய
தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.”
ஆண்டவருடைய பிரசன்னத்தையும் சமூகத்தையும்
நீங்கள் கனம் பண்ண வேண்டும் என்று ஆவியானவர் இன்று உங்களுக்கு சொல்கின்றார்.
1.
தேவனுடைய பிரசன்னத்தை கனம் பண்ணுங்கள்
“அப்பொழுது அவன் அவரை நோக்கி:
உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.”
யாத்திராகமம் 33:15
இஸ்ரவேல் ஜனங்கள் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்திற்கு
நேராக தங்கள் முகத்தை திருப்பினபடியால் தாம் அவர்கள் நடுவாக இருப்பதில்லை என்பதாக தேவன்
மோசேயினிடத்தில் கூறுகின்றார். ஆனால் தேவனுடைய சமூகம் எவ்வளவு முக்கியமானது என்ற மோசே
அறிந்திருந்தபடியால் அவன் தேவனிடத்தில் அதற்காக மன்றாடுகிறான். அவரின் சமூகம் கூட வராமற்போனால்
தாங்கள் அவ்விடம் விட்டு போவதில்லை என்பதில் உறுதியாக நின்றான். மோசே தேவனுடைய சமூகத்திற்கு
முக்கியத்துவம் அளித்தான்.
தேவன் இம்மட்டும் உங்களை நடத்தி வந்திருக்கின்றார்.
உங்களை தூக்கி சுமந்து வருகிற தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதிருங்கள். எக்காரணம்
கொண்டும் நீங்கள் விக்கிரகத்தை நோக்கி உங்கள் முகத்தை திருப்பாதிருங்கள் என்று ஆவியானவர்
இன்று உங்களுக்கு சொல்கின்றார்.
தேவனுடைய சமூகத்திற்கு முக்கியத்துவம்
அளித்து அவரை நாடுங்கள். அவருடைய சமூகமே உங்களுக்கு இளைப்பாறுதலை அளிக்கும்.
“உங்களைக் கிறிஸ்துவின்
கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு
திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்” கலாத்தியர் 1:6
2.
பரிசுத்த ஆவியானவரை கனப்படுத்துங்கள்
“அன்றியும், நீங்கள் மீட்கப்படும்
நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.”
எபேசியர் 4:30
“கர்த்தருடைய ஆவி சவுலை
விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.”
1 சாமுவேல் 16:14
தேவன் சவுலை தம் ஜனங்கள் மேல் ராஜாவாக
உயர்த்தினார். ஆனாலும் அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. சவுலை ராஜாவாக்கினதற்காகக்
கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்.
தேவனுக்கு எதிராகவும் அவருடைய வார்த்தைக்கு
எதிராகவும் உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதிருங்கள். இன்று நீங்கள் மனந்திரும்பி தேவனுடைய
வார்த்தைக்கு கீழ்ப்படிய உங்களை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிற பரிசுத்த
ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்.
3.
தேவன் உங்களுக்கு அருளின கிருபையை பெரிதாக எண்ணுங்கள்
எபேசியர் 2:5 “அக்கிரமங்களில்
மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.”
நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்
என்று 1 கொரிந்தியர் 15:1-ல் பவுல் எழுதுகின்றார்.
நீங்கள் இன்று உயிரோடிருப்பது தேவகிருபையினால்தான்.
நீங்கள் பாவத்தினால் மரித்துப்போயிருந்தீர்கள். தேவகிருபையினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.
தேவன் பரிசுத்தராயிருப்பதுபோல நீங்களும் இன்று பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று ஆண்டவர்
விரும்புகின்றார். அவருடைய கிருபையைவிட்டு விலகி பாவ இச்சைகளுக்குள் கடந்து போயிருக்கிறாய்.
சிலர் நீங்கள் நீதிமான்களாயிருப்பது உங்கள் பெலத்தினால் என்று பெருமைபாராட்டுவதினிமித்தம்
தேவகிருபையை புறக்கணிக்கிறீர்கள்.
இன்று நீங்கள் உங்களைத் தாழ்த்தி மனந்திரும்ப
வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கின்றார்.
உங்களை தம்மிடமாக சேர்த்துக் கொள்ள தேவனின்
இருதயம் இன்றும் ஏங்குகின்றது, வாஞ்சிக்கின்றது. அவருடைய சத்தத்திற்கு செவிக்கொடுத்து
கீழ்படியுங்கள். தேவனுக்கு முக்கியத்துவம் அளித்து அவரை மாத்திரம் கனப்படுத்துங்கள்.
நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்.
# GHG Tamil Short Devotions-6
No comments:
Post a Comment