அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில்,
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள்,
போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். லூக்கா
8:49
ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு
என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி
மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர்
போகையில் ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி
மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
நீ ஏன் தேவனுடைய வல்லமையை
மட்டுப்படுத்தி அவர் கிரியை செய்வதற்கு ஏன் எல்லையை நிர்ணயிக்கின்றாய் என்று ஆவியானவர்
உன்னிடத்தில் கேட்கின்றார்.
எது உன் வாழ்வில் எல்லாம்
முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வர உன்னை தூண்டுகின்றது? உன் வாழ்வில் எதுவும் முடிந்துவிடவில்லை
என்று ஆண்டவர் சொல்லுகின்றார். இது முடிவல்ல. நான் உனக்கு வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுமளவும்
நான் உன்னை கைவிடுவதில்லை என்று இயேசு கிறிஸ்து சொல்கின்றார்.
யவீரு கர்த்தரிடத்தில்
வேண்டிக்கொண்டபொழுது அவர் அவனுடைய மகளை குணமாக்கும்படி அவனோடுகூட போனார். வழியிலே சூழ்நிலை
மாறியது. யவீருவோடுகூட இருந்தவர்களின் விசுவாசமும் மாறியது. ஆனாலும் இயேசு தாம் வாக்குப்பண்ணினதை
யவீருவின் வாழ்வில் நிறைவேற்றினார்.
1. கர்த்தர் நிர்ணயித்து திட்டம் பண்ணினது உன்
வாழ்வில் நிச்சயமாய் நிறைவேறும்.
நான் நினைத்திருக்கிறபடியே
நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச்
சொன்னார். ஏசாயா 14:24
2. நீ எதிர்பார்த்திருக்கின்ற பிரகாரமாய் தேவன்
உன் வாழ்வில் எப்பொழுதும் கிரியை செய்வதில்லை.
“…அவருடைய புத்தி ஆராய்ந்து
முடியாதது.” - ஏசாயா 40:28
உன் வாழ்வின் சூழ்நிலைகள்
கடினமாய் தோன்றும்போது நீ பயப்படாதே. உன் வாழ்வில் தேவனுடைய மகத்துவம் வெளிப்படப்போகின்றது
என்பதை மாத்திரம் அறிந்துகொள். நீ நிச்சயமாகவே தேவனுடைய மகிமையை காண்பாய்.
#GHG Devotions
No comments:
Post a Comment