“…என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.” - I நாளாகமம் 17:17
தாவீதை கர்த்தர் மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தார்.
உன்னைக் குறித்ததான என் திட்டமும் நோக்கமும் உயர்ந்தது என்று ஆவியானவர் இந்த நாளில் உனக்கு சொல்கின்றார். அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதாக உனக்கு தோன்றுகிறது. சில வேளைகளில் உன் உள்ளத்தை வெறுமை நிரப்புகின்றது. நீ தேவனால் முன்குறிக்கப்பட்ட பாத்திரம் என்று ஆவியானவர் உனக்கு சொல்கின்றார்.
தாவீது ஆடுகளின் பின்னே நடந்து கொண்டிருந்தான். அற்பமான நிலையில் அவன் வாழ்க்கை இருந்தது. ஆனால் எளிமையானவனாக, அற்பமாய் எண்ணப்பட்டவனாக இருந்த அவன் வாழ்க்கையைக் குறித்து தேவன் ஒரு உன்னதமான திட்டம் கொண்டிருந்தார். ஆடுகளின் பின்னே நடந்த அவனை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, அவனை அபிஷேகம் செய்து, அவன் சத்துருக்களையெல்லாம் அவனுக்கு கீழ்ப்படுத்தி, அவனை ராஜாவாக உயர்த்தினார். அதுமாத்திரமல்ல, அவனை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தார்.
எப்படிப்பட்ட மேன்மையான சந்ததி?
தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். லூக்கா 1:75
தாவீதை, இயேசு கிறிஸ்து வெளிப்படுகின்ற மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாக தேவன் பார்த்தார்.
இன்று அற்பமாய் எண்ணப்படுகின்ற நீ தேவனுடைய பார்வையில் மேன்மையானவன். நீ இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்த தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம். உன் மூலமாக இயேசு வெளிப்படுவார். உன் தலை உயர்த்தப்படும்; நீ கெம்பீரிப்பாய் என்று ஆவியானவர் இந்த நாளில் உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்.
#GHG Devotions
No comments:
Post a Comment